உலகின் மிகப்பெரிய வனப்பகுதியான அமேசானில் கடந்த சில நாட்களாக காட்டுதீயினால் அந்த பகுதி தொடர்ந்து பற்றி எரிகிறது.
தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் காடு கிட்டத்தட்ட 55 லட்ச சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது. 6400 கிலோமீட்டர் நீளமுள்ள அமேசான் நதி இந்த காடுகள் வழியாக ஓடுகிறது. பல பிரதான விலங்குகள், தாவரங்கள், பூச்சிகள், மீன்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த அமேசான் காடு. உலகின் 20 சதவீத ஆக்சிஜென் அமேசான் காடுகளில் இருந்து வெளிவருகிறது. மேலும் பூமி வெப்பமாகுதலை கட்டுப்படுத்திவதில் அமேசான் காடுகள் பெரும் பங்கு வகிகிறது. https://www.timesnowtamil.com/news/article/amazon-rainforest-burns-as-environmentalists-blame-brazil/258545
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிரேசில் நாட்டுக்கு உட்பட்ட அமேசான் காடுகள் பற்றி எரிகிறது. இதனால் பல தாவரங்கள், விலங்குகள் ஆகிவை தீயில் பரிதாபமாக எரிந்து உயிரிழந்துள்ளன. மேலும் இந்த காட்டுத்தீ பரவுவதால் பல்லாயிரம் ஹெக்டேர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகையால் சூழ்ந்துள்ளது. இந்த புகை அந்த பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 1700 மைல் தூரம் உள்ள சான் பாலோ வரை படர்ந்துள்ளது. இந்த காட்டுத்தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும் அமேசான் காடுகள் அருகில் வசிக்கும் மக்களும் விவசாயிகளும் மரங்களை எரிப்பதால் இது பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Comments
Post a Comment