அமேசான் ஆறு அமேசான் தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவில் உலகின் பெரிய ஆறாகும். மற்றும் சில ஆசிரியர்களின் கூற்றின்படி, உலகின் நீண்ட ஆறாகும். இதன் அளவு மிசிசிப்பி , நைல் , மற்றும் யாங்சே ஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம். இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும். இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அமேசான் ஆறு எந்த இடத்திலும் பாலம் மூலமாக கடக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும். எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை. ப...
Comments
Post a Comment